Firefox ஆனது உங்களுடைய தனிப்பட்ட தகவல்களான பக்கஅடையாளங்கள்,கடவுச்சொற்கள் மற்றும் பயனாளர் முன்னுரிமைகள் என்பவற்றை சேமிக்கிறது.இவ்வாறு சேமிக்கப்படும் கோப்புக்களின் தொகுதி விபரக்கோவை என அழைக்கப்படுகிறது.இது Firefox செய்நிரல் கோப்புக்களிலிருந்து தனியான ஒரு இடத்தில் சேமிக்கப்படுகிறது.நீங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்ட பயனாளர் தகவல்களை கொண்ட பல Firefox விபரக்கோவைகளை வைத்திருக்கலாம்.இவ் விபரக்கோவைகளை உருவாக்க,நீக்க,பெயரினை மாற்றுதல் மற்றும் நிலைமாறுதல் போன்ற செயற்பாடுகளுக்கு விபரக்கோவை முகாமையாளர் உதவுகிறது.
- பல விபரக்கோவைகளை பயன்படுத்தல் மற்றும் விபரக்கோவை முகாமைத்துவம் ஆகியன நீட்சி அபிவிருத்தியாளர்களுக்கான மேம்பட்ட ஆரம்ப அம்சங்கள் ஆகும்.ஆகவே நீங்கள் மேம்பட்ட பயனாளர் ஆக இல்லையென்றால் அல்லது Firefox இல் குறிப்பிட்ட பிரச்சனையுடன் troubleshooting செய்து கொண்டிருந்தால் பல விபரக்கோவைகளை பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும்
பொருளடக்கம்
விபரக்கோவை முகாமையாளரை தொடங்குதல்
- முக்கியமானது: விபரக்கோவை முகாமையாளரை தொடங்குவதற்கு முன்பு Firefox முழுமையாக மூடப்படவேண்டும்
- Windows 7 மற்றும் Vista
- Firefox இலிருந்து வெளியேறுதல். Firefox இனை மூடுவதற்கு, Firefox சாளரத்தின் மேல் உள்ள பட்டியினை தெரிவுசெய்க பின்னர் ஜ தெரிவுசெய்க.
- Windows தொடக்கபட்டியினை திறக்க. கீழே இடது பக்கம் இருக்கும் தேடல் பெட்டியில்:
firefox.exe -ProfileManager
என தட்டச்சுக. - Enter இனை அழுத்துக.
- Windows 2000 மற்றும் XP
- Firefox இலிருந்து வெளியேறுதல். Firefox இனை மூடுவதற்கு, Firefox சாளரத்தின் மேல் உள்ள பட்டியினை தெரிவுசெய்க பின்னர் ஜ தெரிவுசெய்க.
- Windows தொடக்கபட்டியினை திறந்து மீது சொடுக்குக.
- பின்வருமாறு Run dialog இல் நுழைக்க:
firefox.exe -ProfileManager
- மீது சொடுக்குக.
- குறிப்பு: விபரக்கோவை முகாமையாளர் சாளரம் தோன்றாவிட்டால் நீங்கள் Firefox program இன் முழு பாதையினையும் quotes இற்குள் கொடுக்கவேண்டும் ; ஊதாரணமாக:
"C:\Program Files\Mozilla Firefox\firefox.exe" -ProfileManager
- Exit Firefox. To close Firefox, in the menu bar, select the menu, and then select .
- Navigate to /Applications/Utilities. Open the Terminal application.
- In the Terminal application, enter the following:
/Applications/Firefox.app/Contents/MacOS/firefox-bin -ProfileManager
- Press Return.
If Firefox is already included in your Linux distribution or if you have installed Firefox with the package manager of your Linux distribution:
- Exit Firefox. To close Firefox, at the top of the Firefox window, select the menu, and then select .
- In Terminal run:
firefox -ProfileManager
சிலவேளைகளில் Firefox பின்புலத்தில் இயங்கிக்கொண்டிருக்கலாம் அதனால் விபரக்கோவை முகாமையாளர் சாளரம் திறக்கமுடியாமல் இருக்கும்.ஆகவே Firefox இனுடைய அனைத்து instances களையும் மூடுக அல்லது கணினியை மீள்துவக்கம் செய்து பின் மீண்டும் முயற்சிக்க.
ஒரு விபரக்கோவையினை உருவாக்குதல்
- Create Profile Wizard இனை தொடங்குவதற்கு Profile Manager இலிலுள்ள மீது சொடுக்குக.
-
மீது சொடுக்குக பின் விபரக்கோவையினுடைய பெயரை நுழைக்க. விபரக்கோவையினுடைய பெயர் விளக்கத்திற்கு பயன்படுகிறது, ஊதாரணமாக உங்களுடைய தனிப்பட்ட பெயர். இந்த பெயர் இணையத்தில் வெளிப்படுபடுத்தப்படமாட்டாது. - நீங்கள் உங்களுடைய விபரக்கோவை எங்கு சேமிக்கபடவேண்டும் என்பதை தெரிவுசெய்துகொள்ளலாம் இது எதிர்காலத்தில் உங்களுடைய தரவுகள் மற்றும் அமைப்புகளை இன்னொரு கணினிக்கு ஏற்றுமதி செய்யும் போது அல்லது setup செய்யும் போதும் உதவும்.
சேமிப்பக இடத்தினை தெரிவுசெய்வதற்கு
மீது சொடுக்குக.- குறிப்பு: உங்களுடைய விபரக்கோவையினை சேமிக்கும் இடத்தினை தெரிவுசெய்யும் போது ,அதனை புதிய கோப்புறையில் அல்லது தூய்மையாக்கப்பட்ட கோப்புறையில் சேமிக்க. விபரக்கோவையினை நீக்கும் போது அந்த கோப்புறையிலிருக்கும் அனைத்து உள்ளடக்கங்களும் நீக்கப்பட்டுவிடும்.
-
- புதிய விபரக்கோவையினை உருவாக்குவதற்கு, மீது சொடுக்குக.
ஒரு விபரக்கோவையினை நீக்குதல்
- நீக்குவதற்காக ஒரு விபரக்கோவையினை விபரக்கோவை முகாமையாளரிலிருந்து தெரிவுசெய்க பின்னர் மீது சொடுக்குக.
- விபரக்கோவையினை அழிக்க போகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக்கொள்க:
-
- புதிய விபரக்கோவையை உருவாக்கும் போது,நீங்கள் பழைய விபரக்கோவையிலிருக்கும் அனைத்து கோப்புக்களையும் புதிய விபரக்கோவைக்கோவைக்கு நகலெடுக்கமுடியும் அத்துடன் உங்களுடைய விபரக்கோவை தகவல்கள் புதிய விபரக்கோவைக்கு மீட்க்கப்படும்
விபரக்கோவை முகாமையாளரிலிருந்து விபரக்கோவை நீக்கப்பட்டாலும் உங்களுடைய விபரக்கோவை தரவு கோப்புக்கள் அவை சேமிக்கப்பட்ட இடத்தில் வைத்திருக்கப்படும்.ஆகவே உங்களுடைய தகவல்கள் தொலைக்கப்படமாட்டாது
- எச்சரிக்கை: "Delete Files" தெரிவினை பயன்படுத்தி நீக்கப்பட்ட விபரக்கோவை விபரங்களை திருப்பி பெறமுடியாது. விபரக்கோவை மற்றும் அதற்குள் இருக்கும் விபரக்கோவை பக்கஅடையாளங்கள்,அமைப்புக்கள்,கடவுச்சொற்கள் அனைத்தும் நீக்கப்படும் .
- விபரக்கோவை நீக்குதலை இடைநிறுத்தல்.
-
ஒரு விபரக்கோவையின் பெயரை மாற்றுதல்
- பெயரை மாற்றுவதற்காக ஒரு விபரக்கோவையினை விபரக்கோவை முகாமையாளரிலிருந்து தெரிவுசெய்க பின்னர் மீது சொடுக்குக.
- புதிய விபரக்கோவை பெயரை தட்டச்சுக பின்னர்
- குறிப்பு: கோப்புறைக்குள் இருக்கும் கோப்புக்களின் பெயர்கள் மாற்றப்படமாட்டாது.
மீது சொடுக்குக.
தெரிவுகள்
இணைப்பில்லா நிலையில் வேலைசெய்க
இத் தெரிவினை தெரிவு செய்வதன் மூலம் தெரிவுசெய்யப்பட்ட விபரக்கோவையினுடாக முன்னதாக பார்வையிடப்பட்ட இணையபக்கங்கள் மற்றும் experiment களையும் இணையவசதி இல்லாமல் பார்த்துக்கொள்ளலாம்
தொடங்கும் போது கேட்கவேண்டாம்
நீங்கள் பல விபரக்கோவைகளினை வைத்திருந்தால் Firefox தொடங்கும் ஒவ்வொறு தடவையும் எந்த விபரக்கோவையை பயன்படுத்த போகிறீர்கள் என்று Firefox இனால் கேட்க்கப்படும்.இந்த தெரிவினை தெரிவுசெய்வதன் மூலம் இவ்வாறு கேட்பதை நிறுத்தலாம்.
- இந்த தெரிவினை தெரிவுசெய்ததன் பின்னர் ஏனைய விபரக்கோவைகளினை அணுகுவதற்கு நீங்கள் விபரக்கோவை முகாமையாளரை தொடங்க வேண்டும்.
ஒரு விபரக்கோவையினை நகர்த்துதல்
அனைத்து Firefox தரவுகள் மற்றும் அமைப்புக்களை இன்னொரு Firefox நிறுவலுக்காக நகல் எடுப்பதற்கு உங்கள் விபரக்கோவையினை பிரதி காப்பு செய்ய வேண்டும் அதன் பின்னர் உங்களுடைய புதிய இடத்தில் அதனை மீட்டுக்கொள்ளலாம்.
- அறிவுறுத்தல்களுக்காக Back up and restore information in Firefox profiles ஜ பார்க்க.
ஒரு பழைய விபரக்கோவையிலிருந்து தகவல்களை மீட்டல்
பக்க அடையாளங்கள்,கடவுச்சொற்கள்,பயனாளர் முன்னுரிமைகள் போன்ற முக்கியமான தகவல்களை நீங்கள் பழைய விபரக்கோவையில் வைத்திருந்தால் அதனை நீங்கள் நகலெடுப்பதன் மூலம் புதிய விபரக்கோவைக்கு மாற்றமுடியும்.
- அறிவுறுத்தல்களுக்காக Recover important data from an old profile ஜ பார்க்க.