பிரபலமான தேடல் இயந்திரங்கள் முன்பாகவே Firefox -யினுள் இருப்பினும், இந்த மேம்பாடு உங்களுக்கு இன்னும் பல தேர்வுகளை தரும். உங்களுக்கு பிடித்த வலைத்தளங்களில்ருதே இப்பொழுது தேடல் இயந்திரங்களை இணைத்துக்கொள்ளலாம் (உதாரணத்திற்கு வணிகம், காணொளி அல்லது செய்தித் தளங்கள்).
எவ்வாறு அதனை செய்ய வேண்டுமென இங்கே காணவும்:
- தங்களுக்கு இணைக்க வேண்டிய வலைத்தளத்திலுள்ள தேடல் பெட்டகத்தை அமுக்கவும். (உதாரணத்திற்காக இங்கே விக்கிப்பீடியாவை எடுத்துள்ளோம், ஆனால் இந்த வழிமுறைகள் பிற வலைத்தளங்களுக்கும் பொருந்தும்.)
- விசைப்பலகையின் மேலே தோன்றும் தேடலை இணைக்கவும் குறும்படத்தை சொடுக்கவும்.
அடுத்தமுறை தாங்கள் ஒரு தேடலை துவங்கும்பொழுது, தங்களின் விரைவுத் தேடல் தேர்வுகளில் ஒன்றாக தங்களது புதிய தேடல் இயந்திரமும் இருக்கும். அதனை தங்களது default search engine இயல்புநிலை தேடல் இயந்திரமாகவும் கொள்ளலாம்.