Windows இல் Firefox ஐ நிறுவுவதற்கு
சமீபத்திய ஃபயர்பாக்ஸ் பதிப்பை புதுப்பிக்கவும்
கணினியை பாதுகாப்பாக வைக்க ஃபயர்பாக்ஸ் தானே புதுப்பித்துக்கொள்ளும். கைமுறையாக ஃபயர்பாக்சை எப்படி புதுபிப்பது என்பது பற்றி இக் கட்டுரையில் காண்போம்
விபரக்கோவையினை முகாமைத்துவம் செய்தல்
Firefox ஆனது உங்களுடைய தனிப்பட்ட தகவல்களான பக்கஅடையாளங்கள்,கடவுச்சொற்கள் மற்றும் பயனாளர் முன்னுரிமைகள் என்பவற்றை சேமிக்கிறது.இவ்வாறு சேமிக்கப்படும் கோப்புக்களின் தொகுதி [[Profiles|விபரக்கோவை]] என அழைக்கப்படுகிறது.இது Firefox செய்நிரல் கோப்புக்களிலிருந்து தனியான ஒரு இடத்தில் சேமிக்கப்படுகிறது.நீங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்ட பயனாளர் தகவல்களை கொண்ட பல Firefox விபரக்கோவைகளை வைத்திருக்கலாம்.இவ் விபரக்கோவைகளை உருவாக்க,நீக்க,பெயரினை மாற்றுதல் மற்றும் நிலைமாறுதல் போன்ற செயற்பாடுகளுக்கு விபரக்கோவை முகாமையாளர் உதவுகிறது.